பல்கலை நுழைவுத் தேர்வு இரண்டு முறை நடத்த திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 30, 2022

Comments:0

பல்கலை நுழைவுத் தேர்வு இரண்டு முறை நடத்த திட்டம்

'இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'கியூட்' நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது,'' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம்

நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர, 'கியூட்' எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன.அடுத்த கல்வியாண்டு முதல், இரண்டு முறை கியூட் நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் மகனை சேர்த்த எஸ்.பி. - சமூக வலைதளங்களில் பாராட்டு மழை

பிளஸ் 2 பாட திட்டத்தின்படியே, இந்த நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. அதனால், மாநில கல்வி வாரிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எழுதுவது கடினமாக இருக்காது. மேலும், இதற்காக, 'கோச்சிங்'எனப்படும் கூடுதல் பயிற்சியும் தேவையில்லை.பல முன்னணி கல்வி நிறுவனங்கள், 100 சதவீத, 'கட் ஆப்' நிர்ணயிக்கின்றன. பிளஸ் 2 தேர்வில், 98 சதவீதம் பெற்றவர்கள் கூட இந்தக் கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இனி அது தடுக்கப்படும். வாய்ப்பு

மேலும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள கல்லுாரியிலும் சேருவதற்கான வாய்ப்பு இந்த நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும்.புதிய தேசிய கல்விக் கொள்கையிலும், இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த தேர்வு முறை நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews