10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 29, 2022

Comments:0

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

உத்தரபிரதேசத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கிவிட்டன. உத்தரபிரதேசத்தில் கடந்த 4 நாட்களாக 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க | சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை! இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் (இடைநிலைக் கல்வி) ஆராதனா சுக்லா கூறுகையில், ‘கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால் இன்று (நேற்று) 2.9 லட்சம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதவில்லை. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 7.8 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. அதே 2020ம் ஆண்டு 4.8 லட்சமாகவும், 2019ம் ஆண்டு 6.5 லட்சமாகவும் இருந்தது.

இதையும் படிக்க | மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்! நடப்பாண்டு அதிகளவில் மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை. தொற்றுநோய் பரவல் காரணமாக தேர்வுகள் எழுத வரவில்லை என்று கருதுகிறோம். ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மாணவர்கள் இந்தாண்டு தேர்வில் பங்கேற்கவில்லை. மார்ச் 26ம் தேதி நடைபெற்ற மொழித் தாளில் 70,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணத்தை ஆராய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews