அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு - அண்ணாமலை பல்கலைக்கு எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 29, 2022

Comments:0

அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு - அண்ணாமலை பல்கலைக்கு எச்சரிக்கை!

'அண்ணாமலை பல்கலையில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம்' என, பல்கலை மானிய குழு எச்சரித்துள்ளது.

தொலைநிலை படிப்பை நடத்த, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தால், உயர் கல்வியில் சேர முடியாது; வேலை வாய்ப்பும் கிடைக்காது. எனவே, அங்கீகாரம் இன்றி, தொலைநிலை படிப்பை நடத்த, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக அரசும், உயர் கல்வி துறையும், சம்பந்தப்பட்ட பல்கலைகளும் கவலைப்படாமல், அங்கீகாரம் இன்றி படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், யு.ஜி.சி., செயலர் ரஜனீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.

இதையும் படிக்க | 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

அண்ணாமலை பல்கலைக்கு, 2014- - 15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், எந்த படிப்புக்கும் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலை நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலையே முழு பொறுப்பு. எனவே, அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஏற்கனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாமல், அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் ஏராளமானோர் சேர்ந்து படித்தனர். அவர்களில் பலர், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, உயர் கல்வி பெற முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்து, எதிர்கால வாழ்வை இழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews