சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணைகளை வழங்கினார்.
அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 35 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 17 ஆண்டு நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
மேலும், பல்வேறு விருதுகள் பெற்றுள்ள சந்திரசேகர், 21 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 27 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர். 8 ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி உள்ளதுடன், தேசிய, சர்வதேச மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். கல்விப் பணி, ஆராய்ச்சி தொடர்பாக 22 நாடுகளுக்கு சென்றுவந்தவர். 25 முனைவர்பட்ட மானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 11 ஆண்டு நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர்.
மேலும், வேளாண் ஆராய்ச்சியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், 11 புதிய பயிர் வகைகளை வெளியிட்டுள்ளார். 16 புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். 22 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.