தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் மூன்று கட்டமாக, பயிற்சி வகுப்புகள் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும், முதல் கட்ட பயிற்சி வகுப்பை, நாளை நடத்த வேண்டும்.
பிப்., 9ம் தேதி, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்., 18ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட வேண்டும்.
தேர்தல் பணியாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ள, மென்பொருள் உதவி யுடன் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.