Breaking

Tuesday, February 01, 2022

அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:

மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சமூக காப்பீட்டு பயன்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநில அரசு பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பிடித்தம் 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். புதிய சலுகை மூலம் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களும் பயன்பெற முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog