தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: ஊழியர் சங்கம் கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 19, 2022

Comments:0

தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: ஊழியர் சங்கம் கருத்து

“தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தந்துள்ளது” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக அரசின் 2022- -23 பட்ஜெட்டில் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது அரசு ஊழியர்கள் தான். ஆனால் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையும் படிக்க | ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பட்ஜெட்டில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப் படும் என அறிவித்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரானாவின் போது முடக்கப்பட்ட சரண்டர், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் 'அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்' என முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார். அந்த மனநிலையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அவர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews