பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 28, 2022

Comments:0

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
IMG_20220928_085839

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews