New KV School in Theni: A new Kendriya Vidyalaya (KV) school is scheduled to operate in the Theni district starting from the 2026-2027 academic year.
Initial Setup: The school will initially operate temporarily at the Theni-Allinagaram Municipality Primary School building, offering classes from 1st to 5th standard.
Future Expansion: Plans are in place to expand the school gradually based on demand and administrative approvals, with a permanent location already selected near the District Collector's bungalow.
Admissions: Student admissions for the new academic year are planned to begin within 30 days of the announcement
தமிழ்நாட்டில் புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளி துவக்கம். மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு கேந்திரிய வித்யாலயாப் பள்ளி நடப்பாண்டிலிருந்து (2026-2027) செயல்பட உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி (KV School) அமைக்க மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டதுடன், இப்பள்ளிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகில் நிரந்தரமாகப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதுவரை, தற்காலிகமாக தேனி-அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட உள்ளது. நடப்பாண்டிலிருந்து (2026-2027) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவுடன் செயல்படத்தொடங்கும். பின்னர். தேவைக்கேற்ப மற்றும் உரிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
மேலும், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை 30 நாட்களுக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.