அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல்: பாஜக
தில்லி கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்தியப் பொதுப்பணித் துறையின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, தற்போதுள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பட்ஜெட்டை நகர அரசு உயர்த்தியதன் மூலம் தில்லி கல்வித்துறையில் ஊழல் நிகழ்ந்துள்ளது.
மேலும், 2020-ம் ஆண்டில் தில்லி அரசு விஜிலென்ஸ் துறைக்கு அனுப்பப்பட்ட சிவிசி அறிக்கையின்படி, டெண்டர் தொகையை விட 53 சதவீதம் கட்டுமான செலவு ரூ.326 கோடி அதிகரித்துள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவாலின் டிஎன்ஏவில் ஊழல் இருக்கிறது. அவரும், மனிஷ் சிசோடியாவும் ஊழலில் வல்லுநர்கள். இந்தப் பணம் எங்கே போனது? அது உங்கள் பாக்கெட்டில் சென்றதா? இந்த அறிக்கையை நீங்கள் கவனத்தில் கொண்டீர்களா? அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தில்லியில் 500 புதிய பள்ளிகளைக் கட்ட ஆம் ஆத்மி அரசு உறுதியளித்தது. அது நடக்கவே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.