பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 07, 2023

Comments:0

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மீன்வள பல்கலை முறைகேடு தொடர்பான மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மீன்வள பல்கலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் ஜெயசகிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை உள்ளது. அரசின் அனுமதியின்றி, வெவ்வேறு பட்டப் படிப்புகளை வழங்கும் ஒன்பது சுயநிதிக் கல்லுாரிகள் துவங்க அனுமதிக்கப்பட்டது.

இதற்கு பல்கலை நிதி, மானியம், இதர அரசு நிதிகளிலிருந்து தொகை திருப்பிவிடப்பட்டது. இதனால் வழக்கமான பட்டப்படிப்புகள் நடத்தப்படவில்லை. உதவிப் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு 2018 ஜூன் 27ல் வெளியானது. இதில் விதி மீறல் உள்ளது.

பல்கலையின் அப்போதைய துணைவேந்தர் பெலிக்ஸ், பதிவாளர் ஸ்ரீனிவாசன் மீது விசாரணை, நடவடிக்கை கோரி பல்கலை வேந்தர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலருக்கு 2020ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயசகிலா கூறியிருந்தார். மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

தமிழக அரசு தரப்பில், 'மனுதாரர் குறிப்பிடும் எதிர்மனுதாரர்கள் தற்போது பணியில் இல்லை. இருப்பினும் மனு சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'மனுவை கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் பரிசீலிக்க வேண்டும். பெலிக்ஸ், ஸ்ரீனிவாசன் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews