TET Paper 2 - Maths & Science -ல் கொடுக்கப்பட்டுள்ள தவறான விடை Incorrect answer provided in TET Paper 2 - Maths & Science.
போபால் விஷ வாயு துயரம்
தமிழ் வழியில்
மெத்தில் ஐசோ சயனைடு என்று உள்ளது.
ஆங்கில வழியில் மெத்தில் ஐசோசயனேட் என்று உள்ளது. பாட நூல் வந்து இத்தனை ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது. தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் இந்த வினா கேட்கப்பட்டு இருந்தால் மாணவர் எதிர்காலம் யார் பொறுப்பு?
பாடநூல் ஆசிரியர்கள் குழு எதற்கு?
வெற்று அலங்காரத்திற்கா?
TET வினா எடுத்த ஆசிரியர்கள் தமிழ் வழி புத்தகம் அல்லது ஆங்கில வழி புத்தகம் எதனை எடுத்துக் கொண்டார்கள்?
யாருக்கும் எந்த பொறுப்பு உணர்வும் இல்லை
TET
Paper 2
Q N 129
11ஆம் வகுப்பு chemistry volume 2 page number 284
உங்களுக்குத்
தெரியுமா?
போபால் துயரம்
1984 ஆண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் நாள் அதிகாலையில் இந்திய நகரமான போபாலில், உலகிலேயே அதி மோசமான இரசாயன பேரழிவு நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு எனும் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி ஆலையில் ஏற்பட்ட வெடிப்பால் நச்சுத்தன்மை கொண்டவாயு (மெத்தில்ஐசோசயனைடு காற்றில் கலந்தது.இந்த வாயுகாற்றை விட இருமடங்கு கனமானது, எனவே காற்றில் கலைந்து செல்லாமல் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் போர்வை போல சூழ்ந்து கொண்டது. இது மக்களின் நுரையீரலை தாக்கி, சுவாசித்தலை பாதித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாழாகியது. உயிர் பிழைத்தவர்களின் நுரையீரல்கள், மூளை, கண்கள், மற்றும் இரைப்பைக் குடல், நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியன மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
DO YOU KNOW?
The Bhopal Tragedy
The world's worst chemical disaster happened in the Indian city of Bhopal in the early morning hours of December 3, 1984. An explosion at the Union Carbide pesticide plant released a cloud of toxic gas (methyl isocyanate) C*H_{3}*NCO into the air. Since the gas was twice as heavy as air, it did not drift away but formed a 'blanket' over the surrounding area. It attacked people's lungs and affected their breathing. Thousands of people died and the lives of many were ruined. The lungs, brain, eyes, muscles as well as gastrointestinal, neurological and immune systems of those who survived were severely affected.
Sunday, July 19, 2026
TET Paper 2 - Maths & Science -ல் கொடுக்கப்பட்டுள்ள தவறான விடை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.