Breaking

Monday, July 20, 2026

குழந்தைகள் அறிவியல் மாநாடு - வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி - மாணவர்கள் 31ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

கூடலூரில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கூடலூரில், நடைபெறஉள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட மாணவர்களின், அறிவியல் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நவ., மாதம் கூடலூரில் நடைபெற உள்ளது. இதற்காக, பள்ளி மாணவர்கள் ஆய்வு கட்டுரை தயாரிப்பதற்காக உதவிடும் வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம், கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலாபாய் தலைமை வகித்தார்.

அறிவியல் இயக்க மாநில செயலாளர் சங்கர், 'தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு' குறித்தும், மாநில கருத்தாளர் ராஜூ, செயற்குழு உறுப்பினர் ரிஷி சரவணன் ஆகியோர், 'நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வு கட்டுரை தயாரிக்க, ஆசிரியர்கள் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கினர். முகாமில், 65 பள்ளிகளைச் சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட துணை செயலாளர் சந்திரகுமார் நன்றி கூறினார். மாநில செயலாளர் சங்கர் கூறுகையில், 'ஆய்வு கட்டுரையில் பங்கேற்கும் 6 முதல் பிளஸ் 2 மாணவர்கள் 31ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். கட்டுரைகள் நவ., மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குழுவில் இரு மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியரோடு இணைந்து ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கலாம்.

ஆய்வுக் கட்டுரை உள்ளூர் பிரச்சனையை மையப்படுத்தி பொதுமக்கள்பயன்படும்வகையில் தயாரிக்க வேண்டும்.' என்றார்.



This newspaper article, dated July 20, 2026, details a training session held for teachers in Cuddalore regarding an upcoming children's science conference.

The training focused on preparing research papers for a competition centered on developing new scientific inventions for sustainable growth.

Sixty-five teachers from various schools participated in the event, which was organized by the Tamil Nadu Science Movement.

Students from grades 6 to 12 can submit their research papers to the competition by November 30

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog