Breaking

Monday, July 20, 2026

அகில இந்திய பார் கவுன்சில் நடத்திய வக்கீலுக்கான தகுதி தேர்வில் 59 ஆயிரம் பேர் தோல்வி



This article discusses the results of the All India Bar Examination conducted by the Bar Council of India for law graduates to qualify as advocates.

Out of 175,701 candidates nationwide, 59,876 candidates failed the exam.

The next exam is scheduled for November 29, with online registration beginning on August 19.

குறிப்பு: வழக்கறிஞர் தொழில் செய்வதற்கான சான்றிதழ் (Certificate of Practice) பெற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் (BCI) நடத்திய அகில இந்திய பார் தேர்வு (AIBE-XXI) முடிவுகள் தொடர்பான முக்கியமான விவரங்கள் பின்வருமாறு:

தேர்வு முடிவுகள் - முக்கியப் புள்ளிவிவரங்கள்மொத்தம் தேர்வெழுதியவர்கள்: 1,75,701 நபர்கள் தேர்ச்சியடைந்தவர்கள்: 1,15,805 பேர் (65.92%) தோல்வியடைந்தவர்கள்: 59,876 பேர் (சுமார் 34.08%)

⚖️ கட்-ஆஃப் மதிப்பெண் குறைப்பு வழக்கமான தகுதி மதிப்பெண்களில் இருந்து கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைப்படி 3 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன:

பொது / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (General/OBC): 42 மதிப்பெண்கள் (முன்பு 45) SC / ST / மாற்றுத்திறனாளிகள்: 37 மதிப்பெண்கள் (முன்பு 40)

🔄 தோல்வியடைந்தவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தோல்வியடைந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த கட்டத் தேர்வுக்கான (AIBE-XXII) அட்டவணையை பார் கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது: அடுத்த தேர்வு நாள்: நவம்பர் 29, 2026 இணையவழி விண்ணப்பத் தொடக்கம்: ஆகஸ்ட் 19, 2026 விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 27, 2026 தேர்வர்கள் தங்களது முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகளை allindiabarexamination.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். அகில இந்திய பார் கவுன்சில் நடத்திய வக்கீலுக்கான தகுதி தேர்வில் 59 ஆயிரம் பேர் தோல்வி

சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்காக இந்திய பார் கவுன்சில் அகில இந்திய வக்கீல்கள் தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றும் தகுதியை பெறுகிறார்கள்.

அந்தவகையில் கடந்த மாதம் 7-ந்தேதி இந்த தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் 292 மையங்களில் நடந்த இந்த தேர்வில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 909 ஆண்கள், 64 ஆயிரத்து 78-பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 701 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

59ஆயிரம் பேர் தோல்வி

இதில் ஆண்களில் 73 ஆயிரத்து 45 பேர், பெண்களில் 42 ஆயிரத்து 757 பேர். திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 59 ஆயிரத்து 876 பேர் (ஆண்கள்-37,849, பெண்கள்- 22,022, திருநங்கைகள்-5) தோல்வியை தழுவினர். முறைகேட்டில் ஈடுபட்ட 20 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தமட்டில் 2,469 பேர் இத்தேர்வை எழுதிய நிலையில் 581 பேர் தோல்வி அடைந்தனர். அடுத்த தேர்வு நவம்பர் 29-ந்தேதி நடைபெறும் என்றும், இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தொடங்கும் என்றும் பார் கவுன்சில் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog