Breaking

Monday, July 20, 2026

உயர்ந்த கட் ஆப்... குறைந்த தேர்ச்சி: நீட் 2026 சொல்வது என்ன...



உயர்ந்த கட் ஆப்... குறைந்த தேர்ச்சி: நீட் 2026 சொல்வது என்ன...

தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன? முழம் என்ன? என்ற நிலைதான் இன்று தமிழகத்தில் நீட் எதிர்ப்பு நிலை.

நீட் தேர்வு மதிப்பெண் குறைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ, நீட் தேர்வு நடைமுறையில் பிரச்சனை வந்தாலோ பொங்கி எழும் ஊடகங்களும், போராளிகளும், அதிக மதிப்பெண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது, வரலாறு காணாத அளவிற்கு சமூகநீதி நிலைநாட்டப்பட்டிருப்பது தெரிந்த பின்னும் மௌனம் சாதிப்பது அதிர்ச்சி அல்ல, ஆச்சரியமல்ல. அவர்கள் எண்ணத்தின் வெளிப்பாடு.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மூன்று முக்கிய விஷயங்களில் அவர்களுடைய எதிர்ப்புக்கு மாணவர்களின் வலுவான முன்னேற்றம் சரிவிற்கு அவர் கள்தான் காரணம் என பதில் சொல்லியுள்ளது நீட் தேர்ச்சி அறிவிப்பு. தேர்ச்சி அதிகரிப்பு

இந்தியா முழுமையும் பட்டியலின மாணவர்களின் பங்கேற்பு மற்றும் தேர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பட்டியலினம் மட்டுமில்லாமல், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்பும் கடந்த 10 ஆண்டுகளில் 96,456ல் இருந்து, 1,51,366 என 56.9% அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக தகுதி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

மூன்றாவதாக தமிழக மாணவர்களின் பங்கேற்பும் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதற்கு இங்குள்ள அரசியல் சூழலே காரணம்.

மனநிலை பாதிப்பு

தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக இருந்தாலும் இங்கு இருக்கக்கூடிய அரசியல் எதிர்ப்புகள் அவர்களுடைய மனநிலையை பாதிக்கிறது என்பதற்கு முக்கியமான உதாரணம் 2021 தேர் தலை ஒட்டிய நீட் தேர்வில் மாணவர்களின் பங்கேற்பு மற்றும் தேர்ச்சி.

அதேபோல் 2026 தேர்வு தலை ஒட்டிய நீட் தேர்வு பங்கேற்பு மற்றும் தேர்ச்சி. 2017ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 83,859. தேர்ச்சி விகிதம் 38.8. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 2021ல் 1,08,356 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றாலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் 2020ஜ விட 5% குறைவு. அதாவது 57.4ல் இருந்து, 52.8%. அதற்கு காரணம் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் எங்களுடைய முதல் கையெழுத்து நீட் தேர்வு ஒழிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை மாணவர்கள் சிலர் நம்பி ஏமாந்ததுதான்.

அதே நிலைதான் 2026ம் ஆண்டிலும், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்க உண்மை. 2025 விட 15,000 மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எண்ணிக்கையில் குறைவு, தேர்ச்சி விகிதமும் குறைவு. ஏனென்றால் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்று இன்றைய முதல்வரும் குரலை உயர்த்தோடு மட்டுமல்லாமல், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் தந்து, அதுவும் நடக்காமல் போனது மாணவர்களின் எண்ண ஓட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. நம் மாணவர்களின் இந்த மனமாற்றம் மற்றும் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு பொறுப்பு ஏற்குமா?

தமிழில் தேர்வு

நம் மாணவர்களின் இந்த தேர்ச்சி விகிதத்திற்கு தமிழக அரசியல் சூழல்தான் காரணம், மாணவர்கள் பொறுப்பல்ல அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள் என்பதற்கு தமிழில் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை 29 மடங்கு அதிகரித்துள்ளது உதாரணம். 2019ல் 1017 ஆக இருந்த தமிழ்மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 2026ல் 29,845 என 29 மடங்கு அதிகரித்துள்ளது.

அரசியல்வாதிகளிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது அனுதாபத்தை அல்ல, தங்களை தொல்லை செய்யாமல் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருப்பதுதான். இனியாவது நீட்டில் அரசியல் செய்யாமல் அமைதி காத்தால் மாணவர்கள் இவர்களை மன்னிப்பார்கள்.

- முனைவர் ஆர்.காயத்ரி, கல்வியாளர்

High Cut-Offs and Reduced Pass Percentage: The article discusses how NEET 2026 presents a challenge for Tamil Nadu students, highlighting a scenario of high cut-off scores alongside a lower pass percentage.

Performance Comparison (2017–2026): A table in the article provides a year-by-year comparison from 2017 to 2026, showing the number of candidates who appeared, passed, and the resulting pass percentage.

Political Context: The text links these results to political promises regarding the removal of NEET in Tamil Nadu and advises students not to be swayed by false assurances.

Increased Tamil Medium Participation: Despite the overall challenges, the number of students taking the exam in Tamil has increased 29-fold since 2019.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog