ஆசிரியை பணியிடை நீக்கம்
மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவருக்கும் தனக்கன்குளம் பகுதியில் உள்ள வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீரமணியுடன் சோ்ந்து ஆசிரியை, டியூசன் படிக்க வரும் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ ஒன்று வெளியானதால், மாணவா்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஆசிரியை மற்றும் அவரது நண்பா் வீரமணி ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பள்ளி கல்வித்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மேலூா் கல்வி மாவட்ட அலுவலா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.