சுற்றுலா செல்ல முடியாமல் ஆசிரியர்கள் கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 16, 2022

Comments:0

சுற்றுலா செல்ல முடியாமல் ஆசிரியர்கள் கவலை

Bangalore: The Department of Education is gearing up to implement the Education Development Program next academic year. Thus for elementary and high school teachers, this time the summer vacation was gone. Due to the corona, during the summer vacation for two years, not everyone, including the teachers, was planning to go on a trip with the family this time.

But at their request, the Department of Education has laid the groundwork. The Department of Education has decided to start the academic year 15 days in advance of the current year, with a view to implementing the Education Development Program. The Department of Education is preparing to provide phased training to government primary and secondary school teachers in each district of the state by May 10. Formed as a team of 40 teachers, the training will be conducted by experts for two days.

Although the training is just two days, the list of which teacher will be trained on which day is not ready yet. The teachers feel that if the training day is announced tomorrow, arrangements can be made to go on tour. Even if the teachers participate in the training given during the holidays, there will be no physical or mental happiness. Holidays have already been reduced. In this case, it is not advisable to train during the holidays. Thus the teachers, despite the holidays, are going without.Thus he said அடுத்த கல்வியாண்டில், கல்வி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. இதனால் தொடக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இம்முறை கோடை விடுமுறை இல்லாமல் போய்விட்டது.கொரோனா காரணத்தால், இரண்டு ஆண்டுகளாக கோடை விடுமுறையில், ஆசிரியர்கள் உட்பட அனைவராலும் சுற்றுலா செல்ல முடியவில்லை.இம்முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இவர்களின் விருப்பத்தில், கல்வித்துறை மண்ணை போட்டுள்ளது.கல்வி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன்பே, கல்வியாண்டை துவங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், கோடை விடுமுறைக்கு முன்னரே, நோடல் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.தற்போது தொடக்க, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கட்டம், கட்டமாக பயிற்சியளிக்க கல்வித்துறை தயாராகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின், அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மே 10க்குள் பயிற்சியளிக்கப்படும். 40 ஆசிரியர்கள் கொண்ட குழுவாக அமைத்து, வல்லுனர்கள் மூலம் இரண்டு நாட்கள் பயிற்சியளிக்கப்படும்.பயிற்சி வெறும் இரண்டு நாட்கள் தான் என்றாலும், எந்த ஆசிரியருக்கு, எந்த நாளில் பயிற்சியளிக்கப்படும் என்ற பட்டியல் இன்னும் தயாராகவில்லை.

யாருக்கு எப்போது பயிற்சி இருக்கும் என்பது தெரியாததால், சுற்றுலா செல்ல முடியாமல், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.பயிற்சி நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பயிற்சி நாளை அறிவித்தால், சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என, ஆசிரியர்கள் கருதுகின்றனர்.ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கல்வி மேம்பாடு திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியை, பள்ளி நாட்களிலேயே அளிக்கலாம். விடுமுறை நாட்களில் அளிக்கப்படும் பயிற்சியில், ஆசிரியர்கள் பங்கேற்றாலும், உடல், மன ரீதியாக மகிழ்ச்சி இருக்காது.ஏற்கனவே விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களிலேயே பயிற்சியளிப்பது சரியல்ல. இதனால் ஆசிரியர்கள், விடுமுறை இருந்தும், இல்லாமல் போகிறது.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews