மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குநர்களின் தெளிவான விளக்கம் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 17, 2022

Comments:0

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குநர்களின் தெளிவான விளக்கம் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

17.05.2022

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குனர்களின் தெளிவான அறிக்கை..

பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உணரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்தவர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தடையின்மைச் சான்று பெற்று வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் தயக்கமின்றி செல்லலாம். நேற்று இரவு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது "இயக்குநரகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு வழங்கி விட்டோம்.. எவ்வித தயக்கமின்றி அவரவர்கள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்." சங்க வித்தியாசமின்றி ஆசிரியர்களின் நலனுக்காக தான் நாம் சங்கம் நடத்தி வருகின்றோம். சங்கத் தலைவர்கள் அவரவர்கள் முழு பொறுப்பேற்று பணி முடித்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைப்போம். எவராவது நடவடிக்கைகள் எடுத்தால் தகவலினை தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்சியின் மீது வெறுப்புணர்வை ஆசிரியர்களுக்கு நாளுக்கு நாள் பீறிட்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மையாகும். மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பது, ஆசிரியர்கள் 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வது, அப்புறம் 20 ஆம் தேதி வரை வரத் தேவையில்லை என்று சொல்லுவது இப்படி எல்லாம் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு உள் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள் என்று பேச வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் வரும் போது இதனை நாங்கள் நிருபிப்போம் ...

வாழ்த்துகளுடன்...

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews