MBA படிப்புக்கான CMAT நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 23, 2026

Comments:0

MBA படிப்புக்கான CMAT நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

1. மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் (CMAT) எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

2. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

3. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு நாளை மறுதினம் (25-ம் தேதி) நடைபெறுகிறது.

4. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அக். 17-ல் தொடங்கி நவ. 25-ம் தேதி முடிவடைந்தது.

5. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

6. தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுகளை https://cmat.nta.nic.in/ எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7. கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம்.

8. சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews