Breaking

Saturday, June 13, 2026

அரசு ஊழியர் ஓய்வூதியர் காப்பீட்டு திட்டம்: சங்கங்களிம் கருத்து கேட்டு நடைமுறைபடுதத தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.



*அரசு ஊழியர் ஓய்வூதியர் காப்பீட்டு திட்டம்: சங்கங்களிம் கருத்து கேட்டு நடைமுறைபடுதத தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. Government Employee and Pensioner Insurance Scheme: High Court orders Tamil Nadu government to implement it after seeking the views of associations.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில், குளறுபடிகள் குறித்து அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, முடிவெடுக்கவேண்டும்

என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது .

மதுரையைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ரவி மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய பாதிப்புக்காக மாநில அரசின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றார்.

சிகிச்சைக்கு ரூ.3.73 லட்சம் செலவான நிலையில் காப்பீடு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாயை மட்டுமே வழங்கியது. மீதி தொகையை தர மறுத்து விட்டது எனவே மீதமுள்ள ரூ.2.72 லட்சத்தை திரும்ப வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி ரவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்

அவரது மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி அரசுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார்

மனுதாரர் , அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதிலும் கணிசமான தொகையை தனது சொந்தப்பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மருத்துவ அவசர காலங்களில் நிதிச் சிரமத்திற்கு உள்ளாக்காமல் சரியான நேரத்தில் மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதற்காகவே மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

'புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணம் செலுத்தாமல் சிகிச்சை வழங்கப்படும் என்றபோதிலும், மொத்த மருத்துவச் செலவும் திட்டத்தின் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள் இருந்தபோதிலும், மனுதாரர் கூடுதலாக சொந்த பணத்தில் ரூ.2,73,494 செலவிட வேண்டியது ஏற்பட்டுள்ளது.

மனுதாரர் மருத்துவச் செலவுகளைத் திரும்ப கேட்டு அளித்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.

அரசு ஊழியர்கள், தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்காக நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

ஊழியர்களின் நலனுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம், அதன் நோக்கத்தை அடையத் தவறும் பட்சத்தில் அரசு மெளனமாக இருக்கக்கூடாது.

இத்திட்டத்தின் அடிப்படை வாக்குறுதியே கட்டணமின்றி சிகிச்சை என்பது தான். இருப்பினும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால்6 ஊழியர்கள் சொந்த பணத்தை இழக்க வேண்டியதுள்ளது.

இந்து திட்டம் சிகிச்சை செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கும் நோக்கம் மற்றும் குறிக்கோள் உறுதி செய்யப்பட வேண்டும்.

பயனாளிகள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படாதவாறு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

செலவுகள் ஏற்பட்டால் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புகளுக்கு உட்பட்டாவது அதற்கான தொகையைத் திரும்பப் பெற வசதி செய்யப்பட வேண்டும்.

இத்திட்டத்திற்கான தொகுப்பு கட்டணங்களை நிர்ணயிப்பதில் மாநில அரசு விலகி இருக்க முடியாது.

எனவே காப்பீட்டு நிறுவனம், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்பாடுகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகுப்பு கட்டணங்களை மாநில அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படி நிர்ணயிக்கும்போது, சிகிச்சைக்கு எதிர்பார்க்கப்படும் செலவு மற்றும் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உச்சவரம்பு வரம்புகள் ஆகிய இரண்டையும் உரிய முறையில் கருத்தில் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் கட்டணமி ல்லா சிகிச்சை என்ற வாக்குறுதி பெரும்பாலும் மாயையாகவே இருக்கும். பேக்கேஜ் கட்டணம் நிர்ணயம் செய்வதிலும் வெளிப்படைத் தன்மை தேவை.

இந்தக் கட்டணம் அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும். எதிர்காலங்களில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில், தேவைக்கேற்ப தவணைத் தொகைகளை உயர்த்துவதுடன், காப்பீட்டுத் தவணைத் தொகையின் ஒரு பகுதியைத் தானே செலுத்துவதன் மூலம் அரசு தனது பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டும் முடிவெடுக்கலாம்.

கேரளத்தில் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கும் அதற்கான தொகுப்பு கட்டணங்கள், அடிப்படை கட்டணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கும் சட்டம் உள்ளது.

அந்த நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் .

அரசு ஆணைகளின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுப் பாதுகாப்பை, தனியார் ஒப்பந்தங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தனிப்பட்ட தொகுப்பு கட்டணங்களைக் காரணம் காட்டி மறுக்க முடியாது.

மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தனியார் ஒப்பந்தங்களை விட அரசின் நிர்வாக உத்தரவுகளை மேலோங்கி நிற்கும்.

இத்திட்டத்தில் அதிகபட்ச கட்டண வரம்பு, அனுமதிக்கப்பட்ட மருத்துவ செலவுகளை கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

மனுதாரருக்கு கூடுதல் மருத்துவ செலவை மாநில அளவிலான குழு பரிசீலித்து 3 மாதத்தில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதி அரசர் புகழேந்தி தமது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog