Breaking

Tuesday, July 14, 2026

புதிய காப்பீட்டுத் திட்டம் 2026 - மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் விரைவில் செய்யலாம்..

புதிய காப்பீட்டுத் திட்டம் 2026 - மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் விரைவில் செய்யலாம்...

புதிய காப்பீட்டுத் திட்டம் - 2026

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் விவரங்களை உள்ளடக்கிய, அவர்களின் IFHRMS அடையாள எண் அடிப்படையிலான மின்னணு அடையாள அட்டை (e-identity cards) பயனாளிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் காப்பீட்டு நிறுவனம் செய்யும். இந்த அட்டையானது திட்டம் தொடங்கப்பட்ட (01-07-2026) நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மின்னணு அடையாள அட்டையை களஞ்சியம் கைப்பேசி செயலி வழியாக பதிவிறக்கம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் காப்பீட்டு நிறுவனம் செய்யும்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் தரவு அடிப்படையில் மின்னணு அடையாள அட்டை (e-identity cards) வழங்கப்படும். எனவே, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. 01-07-2026 -க்கு பின் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் மட்டும் விண்ணப்பங்கள் சமர்பிக்கலாம். அரசாணை எண்.123, நிதி (சுகாதாரக் காப்பீடு) துறை, நாள்: 24.06.2026

This document outlines a new insurance scheme for pensioners and their families in Tamil Nadu, effective from July 1, 2026.

It details the issuance of e-identity cards based on IFHRMS ID numbers, which beneficiaries can download via a mobile app within 60 days of the scheme's launch.

Existing pensioners do not need to apply again, as cards will be issued automatically based on existing data, while only those retiring after July 1, 2026, need to submit new applications.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog