பள்ளிக் கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கம்: சிறப்புத் தகுதிகள் நிர்ணயம்
சென்னை, ஜூன் 5: பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமர், உடற் கல்வி விரிவுரையாளர், கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் ஆகிய புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.
அந்தப் பதவிகளுக்கு சிறப்புக் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப் பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் ப.சந்தர மோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறையில் புரோகிராமர் என்ற பதவி நேரடி நியமன முறையில் நிரப்பப்படு கிறது. இந்த பதவிக்கு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்எஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்சிஏ கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு டேட்டா ஸ்ட்ரக்சர், அல்காரிதம்ஸ், டேட்டாபேசஸ், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் அவசியம். அதேபோல், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின் கீழ் கான் சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் என்ற புதிய நேரடி நியமன பதவி உருவாக்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதியாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது பிசிஏ பட்டப் படிப்பு நிர்ணயிக்கப்படு கிறது.
அத்துடன் டேட்டா ஸ்ட்ரக்சர், அல்காரிதம்ஸ், டேட்டாபே சஸ், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் டிசைனிங், டிபக்கிங் உள் ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டு கால பணி அனுபவம் வேண்டும்.
மேலும், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடத்தில் புதிதாக விரிவுரையாளர் பதவி உருவாக்கப் படுகிறது. இந்தப் பதவிக்கு முதுநிலைப் பட்டத்துடன் எம்பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
This Tamil news article details the creation of new technical positions within the Tamil Nadu school education department, specifically for roles like Programmers and Machine Supervisors.
New Roles: The department is establishing positions for Programmers, Physical Education Lecturers, Console Operators, and Machine Supervisors.
Qualifications: Specific educational qualifications, such as degrees in Computer Science or Information Technology, are required, along with at least 4 years of relevant work experience.
Recruitment: These positions will be filled through direct recruitment to manage technical aspects within the government examinations and research wings. பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள்: அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுத்துறையில் புரோகிராமர், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின்கீழ் கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடவிரிவுரையாளர் ஆகியபதவிகள் உருவாக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.
விரைவில் அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடற்கல்வி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும் புரோகிராமர்,கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் நிரப்பப்படும்


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.