EMISல் மனமொத்த மாறுதல் பதிவேற்றம் செய்யும் முறை - அறிவுரைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 19, 2023

Comments:0

EMISல் மனமொத்த மாறுதல் பதிவேற்றம் செய்யும் முறை - அறிவுரைகள்

மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் - அறிவுரைகள்

1) பார்வை-1ல் காணும் அரசாணை பத்தி 6-ல் கண்டுள்ளபடி

(a) மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர் ஓய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் இரு கல்வி ஆண்டுகள் பணிக்காலம் உள்ளவர்களே தகுதியானவர்கள். (Example 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுகளில் ஓய்வு பெறுபவர்களாக இருத்தல் கூடாது)

(b) ஏற்கனவே மனமொத்த மாறுதல் ஆணை பெற்றவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணிபுரிந்து இருத்தல் அவசியம்.

2) இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் (எ.கா மூவர்-triangular A-B-C, A-C-B etc.,) மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்க கூடாது.

3) வெவ்வேறு துறை/ அலகுகளுக்கு (Department & Unit) மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்ககூடாது.

4) ஆண் ஆசிரியர்கள் பெண்கள் மட்டும் பயிலும் (Girls High & Hr.Sec.) பள்ளிகளுக்கு மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பரிசிலிக்ககூடாது. இருபாலர் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆண்கள் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். kaninikkalvi.blogspot.com EMISல் மனமொத்த மாறுதல் பதிவேற்றம் செய்யும் முறை

1) நடப்பு ஆண்டில் 2022-23 நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

i) மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர் தனது Individual Teacher Login Transfer Application Mutual Transfer என்றவாறு மனமொத்த மாறுதலுக்கான படிவத்தில் தங்களது விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்யவேண்டும். மேலும் எந்த ஆசிரியருக்கு மனமொத்த மாறுதல் அளிக்கவிரும்புகிறார் என்பதனை அவ்வாசிரியரது EMIS ID (8 Digit ID) யை குறிப்பிட்டு Submit செய்யவேண்டும்.

பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது பள்ளியின் EMIS Login IDயில் உள்சென்று மேற்படி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியரது விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து Approval செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது EMIS Login IDயில் உள்சென்று மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் இருவரது விவரங்களை ஒப்பிட்டு சரிபார்த்து பின்னர் Approve செய்து மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் வழங்கும் ஆணைக்கான தனது அலுவலக ந.க. எண்ணினை குறிப்பிட்டு Order ஐ Generate செய்து கையொப்பம் இட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளன்று வழங்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews