கல்வி கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 03, 2022

Comments:0

கல்வி கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மீரட்டில் மேஜர் தயான்சந்த் பெயரில் அமையும் விளையாட்டு பல்கலைக்கு, பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். சட்டவிரோதம்இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நாட்டின் உயரிய விளையாட்டு விருதுக்கு முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீரட்டில் அமையும் விளையாட்டு பல்கலை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

700 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த பல்கலை, இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளை அளிக்கும்.ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு பட்டம் பெறுவர். முந்தைய ஆட்சியில் உ.பி.,யில் கிரிமினல்கள், மாபியாக்கள் சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், மீரட்டில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்ததை பெண்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் யோகி அரசு பதவியேற்ற பின், கிரிமினல்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது மீரட்டைச் சேர்ந்த பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் இதற்கு முன் இருந்த அரசுகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விளையாட்டு வீரர்கள் தேர்வு உட்பட அனைத்திலும் முறைகேடுகள் நடந்தன.முக்கியத்துவம்ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் முறைகேடுகள் ஒழிக்கப்பட்டன. அதனால் தான், முன் எப்போதும் இல்லாத அளவில் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது.விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இணையாக மாணவர்களுக்கு விளையாட்டும் கற்றுக் கொடுக்கப்படும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தில் பிரதமர் மோடி, சில நிமிடங்கள் பயிற்சி செய்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews