Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 048001/ எம்/ இ4/ 2019, நாள்: 02-07-2021.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு ( Registration ) செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag , 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது தேதி வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே மேற்கண்ட இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும்பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடவும் , www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் POOR LOT M கு முழுமையாக பதிவு செய்திடவும் மற்றும் அதனை உறுதிபடுத்துமாறு ) ( mI ' ( IM M ளப்படுகிறார்கள் மேலும் , A D அனைத்து வகை பானி தலைமை ஆசிரியர்களுக்கும் இத்தகவலினை தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அனுப்புமாறும் மற்றும் அனைத்து வகை ( uotienault ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தொடர்ந்து கண்காணித்து அதன் அறிக்கையினை 2007 2021 அன்று மாலை 5 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( Maccindsc@xmail.com ) அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்படி பணியில் காலதாமதம் ஏற்படின் அதனை ஆணையரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பணியில் காலதாமதம் ஏற்படின் அதனை ஆணையரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.