நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 - வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிய இணையதள முகவரி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 21, 2022

Comments:0

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 - வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிய இணையதள முகவரி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு : 54/2022

நாள்: 21.02.2022
.com/img/a/
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான 21 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 மற்றும் மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் 21.02.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, பதிவான வாக்குகள், 268 வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கு எண்ணும் மையங்களில், அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https://tnsec.tn.nic.in-ல் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602911