தீபாவளி - 78 நாள் போனஸ் : மத்திய அரசு அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

தீபாவளி - 78 நாள் போனஸ் : மத்திய அரசு அறிவிப்பு!!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்து இருந்தது.இந்தநிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது ரயில்வே துறையின் பரிந்துரையை ஏற்று ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கான செலவு ரூ 1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழில் இல்லாத தகுதியுடைய பணியாளர்களுக்கு போனஸை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ 7000 ஆகும். ஒரு ரயில்வே பணியாளருக்கு 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ 17,951 வழங்கப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 2020-201ம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர். அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெறுவர்,என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews