Breaking

Friday, September 24, 2021

ஆன்ட்ராய்டு அலைபேசிகளை குறி வைக்கும் புது வைரஸ் (டிரிங்க் ) - மத்திய அரசு எச்சரிக்கை!

ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.


டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பின் டவுன்லோடு ஆகும் ஆப், அலைபேசியின் எஸ்.எம்.எஸ்., கால் விபரங்களை கண்காணிக்க தொடங்கும். பின்னர் படிப்படியாக ஆதார் எண், டெபிட் கார்டு விபரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விபரங்கள் திருடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog