தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எப்போது; எதிர்பார்ப்புடன் காத்திருப்பு
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள். இதோடு, மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ரூ.3.5 லட்சத்திற்குள் இருப்பது அவசியம். மனத்திறன் பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, படிப்பறிவு பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
இத்தேர்வு அறிவிப்பு, டிச., துவக்கத்திலே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இத்தேர்வு அறிவிப்பு, தற்போது வரை வெளியிடப்படவில்லை.
பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வுக்கு, ஏழாம் வகுப்பில் முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில், முதல் இரு பருவ பாடத்திட்டத்தில் கேள்விகள் இடம்பெறும்.
இன்று முதல் மூன்றாம் பருவம் துவங்கவுள்ளதால், விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இத்தொகை உயர்கல்விக்கு, பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.