போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 21, 2023

1 Comments

போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்

Tamil_News_large_3271901.jpg?w=360&dpr=3
போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் என்.ரங்கராஜன் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.3,400 கோடி கூடுதலாகும். இதன் மூலம் கூடுதல் பள்ளி கட்டடங்கள், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றை வரவேற்கிறோம். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையும் அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் வாக்குறுதி, பொது மேடைகளில் பேசும் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் என பேசுகின்றனர். இந்த அரசின் 3 வது பட்ஜெட்டில் கூட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லை. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என காட்டுகிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆசிரியர்கள் தீவிரப்படுத்துவதை தவிர வழியில்லை என்றார்.
Teacher%27s-Union-information-that-the-struggle-is-intense

1 comment:

  1. blogger_logo_round_35

    தற்போதைய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் திமுகவின் அடிமைகளாக தான் இருக்கப்போகிறது ஆகவே இவர்கள் போராட்டம் தீவிரமாகும் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் இதை பார்த்தால் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு ஆமாம் போர் ஆமாம் போர் போர் போர் என்று சொல்வாரே அந்த நகைச்சுவை காட்சி மட்டும் தான் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84695354