151 இடங்களில் பிரசார கூட்டம்: ஆசிரியர் கூட்டணி தகவல் - Campaign meeting in 151 locations: Teacher's Alliance information
'தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்று 151 பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறினார்.தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது.
மாவட்டத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மகளிரணி மாவட்ட செயலாளர்கள் செல்வி, அமுதா முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பாலா வரவேற்றார். மாநிலத் தலைவர் லட்சுமிபதி, மாநில பொதுச் செயலாளர் தாஸ் பேசினர். வட்டார செயலாளர் துளசிதாஸ் நன்றி கூறினார்.கூட்டத்தை தொடர்ந்து, ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் அளித்த பேட்டி:அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரசாணை எண் 101யை ரத்து செய்து, தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் அரசாணை எண் 151யை வெளியிட்டார்.
இது, தொடக்கக் கல்வித்துறையை சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கிறது. இதனை வரவேற்று மாநிலம் முழுதும் 151 இடங்களில் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படும்' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.