பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 17, 2022

Comments:0

பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

IMG_20220517_095819
பள்ளி திறப்பு தேதி

ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு இறுதி தேர்வு கடந்த, 13ம் தேதி நிறைவுற்றது. அவர்களுக்கு இம்மாதம் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை. விடுமுறை முடிந்து, ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1ல் விடைத்தாள் திருத்தம் துவங்கி, ஜூன் 17 வரை நடத்தப்படுகிறது. பொதுத் தேர்வு பணி முடிந்ததும், மீண்டும் விடை திருத்தும் பணிகளும் உள்ளதால், உயர்நிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத சூழல் உள்ளது.

எனவே, பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், அதன் மாநில பொதுச் செயலர் பிரபாகரன் மனு அளித்துள்ளார்.அதில், 'வரும் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்றும் வகையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84648452