அனைவருக்கும் கல்வி திட்டம் ரூ.3,500 கோடி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் உச்ச நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 17, 2026

Comments:0

அனைவருக்கும் கல்வி திட்டம் ரூ.3,500 கோடி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனைவருக்கும் கல்வி திட்டம் - ரூ.3,500 கோடி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு - ஒன்றிய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, ஜன.17: தமிழ்நாடு அரசுக்கு ரூ.3.500 கோடி

சமக்ர சிக்க்ஷா திட்ட நிதியை உடனே வழங்க உத்தரவிட கோரிய வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அதுல் சந்திருகர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் வில்சன். "இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது 8 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

தமிழகத்திலிருந்து அதிக வரியை பெறும் ஒன்றிய அரசு கல்வி நிதியை வழங்காதததால் 45 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசி ரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார். அப் போது ஆஜரான ஒன்றிய அரசு வழக்கறிஞர், "ஒன்றிய அரசு பதிலளிக்க மேலும் 8 வாரம் அவகாசம் கோரினார். அதனை திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதிகள் இறுதி வாய்ப்பாக நான்கு வாரம் அவகாசம் வழங்கி உத்தர விட்டனர். இதற்கு மேல் இந்த வழக்கில் அவகாசம் கேட்க கூடாது என்று ஒன்றிய அரசுக்கு கண்டிப்பாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews