10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு Class 10 public exam re-totaling results to be released today.
அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்தது. தற்போது மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (https://www.dge.tn.gov.in/ ) இன்று (ஜூலை 6) பிற்பகல் வெளியிடப்படும்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.