தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 15, 2023

Comments:0

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை

தலைமைச் செயலகம் - கடும் இட நெருக்கடி - முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு கோட்டையான அரசினர் தோட்ட ஓமந்துாரார் வளாகத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலக வளாகத்திற்கு உடனடியாக தலைமைச் செயலகத்தினை இடம் மாறுதல் செய்தல் தொடர்பாக. -



வணக்கம்.

தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில், மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு தலைமைச் செயலகமான, ஓமந்துாரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தினை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைந்து எடுத்திட வேண்டும் என கடந்த 19-01-2023 அன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் இட நெருக்கடி மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. மேலும், என்பது பணியாளர்களின் இரு சக்கர / நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் மிகவும் சிரமமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில தளங்களில் மேற்புற பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவது நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அனைத்துத் தளங்களிலும் மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டு, அசுத்தக் காற்று வெளியேறுவதற்கான முறையான அமைப்புகள் இல்லாது அக்கட்டடத்திற்கு குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற நிலை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது கனவுத் திட்டடமான தலைமைச் செயலகத்தினை ஓமந்துாரார் வளாகத்தில் அமைத்தார். ஆனால், அவரது கனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, முத்தமிழ் அறிஞரின் கனவினை நனவாக்கும் வாய்ப்பு என்பது உருவாகியுள்ளது. தலைமைச் செயலகப் பணியாளர்களின் நலனையும் மாண்புமிகு அமைச்சர்கள்- சட்டமன்ற உறுப்பினர்களின் நலனையும் பொது மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரின் தலைமைச் செயலகக் கனவினை நிறைவேற்றும் வகையிலும், உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தினை அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள ஓமந்துாரார் கட்டடத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews