கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்' தகுதித் தேர்வு மார்ச் 6-ல் தொடங்கும் TN SET Exam 2025 Dates, Eligibility Criteria, Pattern - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2025

Comments:0

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்' தகுதித் தேர்வு மார்ச் 6-ல் தொடங்கும் TN SET Exam 2025 Dates, Eligibility Criteria, Pattern

1350876


கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்' தகுதித் தேர்வு மார்ச் 6-ல் தொடங்கும்

What is the upcoming teacher exam for 2025 in Tamil Nadu?

TNTET 2025 exam

The candidates will have to apply for the TNTET 2025 exam online. The candidates will have to pay INR 500 (unreserved/OBC) and INR 250 (SC/ST) as TNTET application fees. The TNTET 2025 is an eligibility exam conducted to determine the eligibility of candidates as Classes 1 to 8 teachers in the schools of Tamil Nadu.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான செட் தகுதித் தேர்வு மார்ச் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு (செட்) திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. இந்நிலையில், செட் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதன்படி, யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செட் தகுதித் தேர்வு மார்ச் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினிவழியில் நடைபெறும். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்படபடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு*

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews