மூன்று நாட்களும் பூஜை அறை விளக்கு அணையாமல் எரிய வேண்டும். மூன்று நாட்களும் பூ அலங்காரங்களால் பளிச்சிட வேண்டும்.
சிவபெருமானின் பக்தனாக இருந்து கடும் தவங்கள் பெற்று கஜமுகாசுரன் என்பவன் மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் இறுமாப்புடன் சுற்றுத்திரிந்த கஜமுகாசுரன் தேவர்களை துன்புறுத்தத் துவங்கினான்.
பின் தேவர்கள் சிவனை நாட சிவனோ யானை தலை கொண்ட மனித உடலாக விநாயகரை படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். பின் விநாயகருக்கும், கஜமுகாசுரனுக்கும் கடும் சண்டைகள் நீள இறுதியாக வினாயகர் தன் கொம்புகளில் ஒன்றை உடைத்து கஜமுகாசுரனை அழித்தார். அன்று ஆவணி சதுர்த்தி என்பதால் விநாயகர் சதுர்த்தியாக வழிபடத் தொடக்கினர்.
அன்று விநாயரை வீட்டிற்கு வாங்கி வந்து வழிபட்டால் அழிக்க முடியாத தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு விநாயகரை வீட்டிற்கு அழைத்து வரும் போது வீட்டில் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதேசமயம் சில விஷயங்களை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னென்ன? பார்க்கலாம். விநாயகர் சிலையை வாங்கும்போது அப்படியே வாங்கி வரக்கூடாது. அதற்கென புதிய மனை வாங்கி அதில் வைத்துதான் வாங்கி வர வேண்டும். விநாயகர் அமர்ந்தபடி இருக்க வேண்டும்.விநாயகரை வீட்டிற்கு அழைத்து வரும் முன்னரே வீட்டை சுத்தமாக வைத்து நேர்மறையான விஷயங்கள் வீட்டைச் சுற்றிலும் இருக்குமாறு செய்ய வேண்டும். உள்ளே நுழைவதற்கு முன் ஆரத்தி எடுத்த பின்னரே உள்ளே கொண்டு வர வேண்டும்.சிலையை வடகிழக்கு நோக்கி வைக்க வேண்டும். குறைந்தது மூன்று நாட்கள் வைக்க வேண்டும்.
அப்போதுதான் வீட்டில் மகிழ்ச்சி நிலை கொண்டிருக்கும்.வீட்டில் இருக்கும் மூன்று நாட்களும் கட்டாயம் காலை மாலை என இரண்டு வேளையும் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த பலகாரங்கள் படைக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
மூன்று நாட்களும் பூஜை அறை விளக்கு அணையாமல் எரிய வேண்டும். மூன்று நாட்களும் பூ அலங்காரங்களால் பளிச்சிட வேண்டும்.மூன்று நாட்கள் வீட்டில் தவறான வார்த்தைகள், எதிர்மறை விஷயங்களை பரப்பக் கூடாது. உதாரணமாக வீட்டில் சண்டை போடுவது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, அழுவது, கத்திக்கொண்டே இருப்பது இப்படி எதுவும் செய்யக் கூடாது. அதேபோல் சூதாட்ட விளையாட்டுகளும் விளையாடக் கூடாது.
அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது. மூன்று நாட்களும் விநாயகருக்கு படைத்த பின்னரே வீட்டில் உணவு உண்ண வேண்டும்.இவற்றை சரியாக செய்தாலே உங்கள் வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் சூழும். பிரச்னைகளும் நீங்கும். அமைதியும் சாந்தமும் உண்டாகும்...