Breaking

Tuesday, May 11, 2021

7வது ஊதியக்குழுவின் படி அகவிலைப்படி உயர்வு?? மேலும் தாமதமாக வாய்ப்பு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் தாமதமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான DA மற்றும் DR நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய அரசு பல கோடி ருபாய் பணம் லாபமடைந்துள்ளது. இந்த நிலுவைப் பணம் வரும் ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 7 வது ஊதியக் குழுவின் மேட்ரிஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 8ம் தேதியன்று நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்தப்படும் என்று ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜே.சி.எம் தேசிய கவுன்சில், ஸ்டாஃப் சைட்டின் செயலாளர் சிவ் கோபால் மிஸ்ரா, அவர்கள் இது தொடர்பாக அரசுடன் ஆலோசிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு தொடர்பான அனைத்து நிலுவையில் உள்ள சிக்கல்களும் ஆராயப்பட உள்ளது. 2021 ஜூலை 1ம் தேதி முதல் தான் புதிய விகிதங்கள் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் DA இன்னும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog