பெண்மையின் உண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினம் வந்த வரலாறு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 08, 2021

Comments:0

பெண்மையின் உண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினம் வந்த வரலாறு

தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் , ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான் நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர்.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
பெண்கள் என்றால், வீட்டு வேலை செய்வது, அதிக பட்சமாக ஆசிரியர், செவிலியர் பணிக்குத் தான் என்ற எழுதப்படாத சட்டம் மாறிவிட்டது.விமான பைலட், ரயில் இன்ஜின் டிரைவர், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது என, பெண்கள் தனித்துவமாக விளங்குகின்றனர். நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பெண்களுக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெண்கள் போராட்டம் ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட, உலக மகளிர் தினம், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து, பெண்கள் உரிமையை வென்றெடுத்த நாள் என, கருதப்படுகிறது. அந்த உரிமை யை வலியுறுத்துவதற்காகவே, ஆண்டுதோறும் மார்ச், 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில், 18ம் நுாற்றாண்டில் தொழிற்சாலை, அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். வீட்டு வேலை செய்வதற்காக, பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தனர்.அந்த காலக்கட்டங்களில் பெரும்பாலான பெண்களுக்கு, ஆரம்ப கல்விக் கூட கற்க அனுமதி அளிக்கப்படவில்லை.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
இந்நிலையில், கடந்த, 1856ம் ஆண்டு, நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலை நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய, முதன் முதலில் வாய்ப்பு தரப்பட்டது.அதன் வாயிலாக, பெண்களாலும் தொழிற்சாலைகளில் பணிபுரிய முடியும் என்பது, உலகிற்கு உணர்த்தப்பட்டது. ஆனால், ஆண்களுக்கு நிகராக பணி வாய்ப்பு வழங்கப்பட்டாலும், ஊதியம் அளிப்பதில் அநீதி இழைக்கப் பட்டது. இதனால், வருத்தமடைந்த பெண்கள் இணைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, குரல் கொடுத்தனர். அதை அமெரிக்க அரசு கண்டு கொள்ளாமல் விட்டது. இதில், கொதிப்படைந்த பெண்கள், 1857, மார்ச் 8ல், இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை, அரசின் ஆதரவுடன், தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒடுக்கினர். உலக மகளிர் தினம் அதன் பின், 1907ம் ஆண்டு, சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் மீண்டும் போராடத் துவங்கினர். அதன் தொடர்ச்சியாக, 1919ம் ஆண்டு, டென்மார்க்கில், பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்பட்டது.இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த, பெண்களின் அமைப்பினர் பங்கேற்றனர். அதே மாநாட்டில் கலந்து கொண்ட, ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, பெண்கள் முதன் முதலில் போராடிய, மார்ச் 8ம் தேதியை, மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என, வலியுறுத்தினார்.
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
மாநாட்டில் அந்த தீர்மானம், சில காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், 1920ம் ஆண்டு, சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில், பெண்கள் உரிமை கோரி மீண்டும் போராட்டம் நடத்தினர்.அதில், பங்கேற்ற ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ஐ, உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என, பிரகடனம் செய்தார்.இதையடுத்து, 1921ம் ஆண்டு முதல், மார்ச் 8ல், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின், 1975ம் ஆண்டு, சர்வதேச மகளிர் தினத்தை, ஐ.நா.,வும் பிரகடனப்படுத்தியது.இன்று மகளிர் தினம், உலகில் குடும்ப பந்தம், பாசம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, ஈகை உள்ளிட்ட, சகலத்திற்கும்ஆதாரமாக விளங்கும் பெண்களை, மதிப்போம், போற்றுவோம், வணங்குவோம். மகளிர் தினத்தில் என்ன பரிசு கொடுக்கலாம்? பெண்கள், நாட்டின் கண்கள் என்பது போல, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும், அந்த வீட்டின் மகாராணி தான். எனவே, வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது சகோதரிக்கு, மகளிர் தினத்தன்று, ஏதாவது பரிசுகளை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தி கவுரவிக்கலாம்.கொடுக்கும் பரிசு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. ஆனால், இந்நாளை மறக்காமல் மனதில் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளைக் கொடுக்க வேண்டும்.அது, அவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அன்பையும் அதிகரிக்கும்.
படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு - கொரோனா கட்டுப்பாடு என்று பூட்டு; எதிர்காலம் வீணாவதாக வேதனை
இப்போது எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம் என்று பார்ப்போம். * சாதாரணமாக ஏதாவது ஒரு சிறப்பு என்றால், கொடுக்கும் பரிசு தான் உடைகள். எனவே, இந்த தினத்திலும் சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை வாங்கிக் கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் * மகளிர் தினம் என்பதால், நிறைய வண்ணமயமான நிறத்திலும், டிசைனிலும் வாழ்த்து அட்டைகள், மார்க்கெட்டில் வெளிவந்துள்ளன. அதில், அவர்களை பற்றி, உங்கள் மனதில் இருப்பதை எழுதிக் கொடுக்கலாம் *பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இந்த மகளிர் தினத்தன்று, அவர்களுக்கு பூங்கொத்துக்களையோ அல்லது பூச்செடிகளையோ வாங்கிக் கொடுக்கலாம். 'அட்லீஸ்ட்' ஒரு முழு பூவாவது வாங்கிக் கொடுக்கலாம் * உங்கள் வசதிக்கு ஏற்ப பெண்களுக்கு பிடித்த, மேக்கப் செட், அணிகலன்களை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்° அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், மூதாட்டிகளுக்கு சிறு பரிசு, இனிப்பு வழங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். இதுவே அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
* அவர்களது போட்டோவை, சற்று வித்தியாசமாக, பிரேம் செய்தோ அல்லது கப்-பில், போட்டோ இருப்பது போன்றோ செய்து கொடுக்கலாம் * மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்றால், இன்று ஒருநாள் சமையல் அறையில் இருந்து, அவர்களுக்கு விடுப்பு கொடுங்கள். உங்களுக்கு தெரிந்ததை செய்து கொடுங்கள். அதைவிட அவர்களுக்கு பெரிய சந்தோஷம் இருக்காது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews