வாழும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் N. சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

வாழும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் N. சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

வாழும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் N. சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!


இந்திய விடுதலைக்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துத் தனது மாணவப் பருவம் தொடங்கி, போராடியவர் தோழர் என். சங்கரய்யா.

விடுதலைக்குப் பிறகும், உழைக்கும் மக்களின் உரிமைக்காக, சமத்துவச் சமூகத்தைக் கட்டமைத்திடத் தொடர்ந்து போராடியவர். சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை எனப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

பாடப் புத்தகத்தில் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்களைக் குறித்துப் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் விடுதலைக்காகப் போராடியப் பெருமகனார், நூறாண்டு காலம் நம்மோடு வாழ்கிறார் என்பது அரிதான, மகிழ்வான அனுபவமாகும்.

வாழும் வரலாறாகத் திகழும் தோழர் என். சங்கரய்யா பிறந்த நூற்றாண்டைக் கோவில்பட்டியில் அவர் பயின்ற பள்ளியும், மதுரையில் அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரியும் உரிய முறையில் கொண்டாட வேண்டும்.

வாழும் விடுதலைப் போராட்ட வீரர் நூற்றாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை; அத்தகைய வாய்ப்பு, தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைத் தக்க முறையில் பயன்படுத்தி, பெரும் மகிழ்ச்சியுடன், மக்களோடு இணைந்து அரசும் கொண்டாட வேண்டும். எளிமையின் சின்னமாக, நேர்மையின் எடுத்துக் காட்டாக, உழைப்பின் உருவமாக நம்மோடு வாழும் தோழர் என். சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டை அரசு விழாவாகத் தமிழ் நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

முனைவர் பி. இரத்தினசபாபதி

தலைவர்
முனைவர் முருகையன் பக்கிரிசாமி

துணைத் தலைவர்

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews