தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 27, 2022

Comments:0

தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2022

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை!

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி: ஆய்வாளர் - 64

தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் அல்லது விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: துணை ஆய்வாளர் - 24

தகுதி: மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது விலங்கியல், மீன்வள அறிவியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினக்கு வயதுவரம்பில் உச்சவரம்பில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2022

மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews