மத்திய அரசு வழங்கியதை போல, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும் என மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதமாக உயர்த்தி வழங்கவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலையொட்டி போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு ஊழியர்கள் 1.7.2021 முதல் 31 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை 2021 டிச., சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு அகவிலைப்படி நிலுவையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும்.போனஸ் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்குகிறது. மூன்றாண்டுகளாக தமிழக அரசு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. எனவே தமிழக அரசு போனஸாக ரூ.7 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.
ஏ, பி பிரிவினர், கிராம ஊராட்சி துாய்மை காவலர்களுக்கும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்றார்.நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், கல்யாணசுந்தரம், மணிகண்டன், மாரியப்பன் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.