மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்க குறைதீர் மன்றம் Grievance Redressal Forum to solve problems and grievances between students, teachers and parents கல்வி பிரச்னைகளை தீர்க்க குறைதீர் மன்றம்?
பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், மாநில, மாவட்ட அளவில் குறைதீர் மன்றம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவர்கள் இடையிலான மோதல், பெற்றோர், ஆசிரியர் இடையிலான பிரச்னைகள் போன்றவை, சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர், மாணவர் இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரே விசாரிக்கும் நிலை உள்ளது.
இதில், இரு தரப்பினர் இடையே நடுநிலையான தீர்வுகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமையில், மாவட்ட, மாநில அளவில் கல்வித்துறை குறை தீர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.