Breaking

Friday, March 18, 2022

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் விக்னேஷ் (8) வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான்.

இதையும் படிக்க | திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

2வது மகன் சர்வேசை (4) நேற்று மதியம் அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். பள்ளியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பியுள்ளனர். வேனை பள்ளி உரிமையாளரே ஓட்டி சென்றுள்ளார். வீட்டு அருகே வேனை விட்டு கீழே இறங்கிய சர்வேஷ் முன் பக்கம் சென்றுள்ளான். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கவே, விக்னேஷ் கத்தினான். அதை கவனிக்காமல் தமிழ்ச்செல்வன் வேனை ஓட்டியதில் சர்வேஷின் தலையில் முன்சக்கரம் ஏறியதில் மூளை சிதறி பலியானான். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே தமிழ்ச்செல்வன் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog