இஸ்ரோவின் 'இளம் விஞ்ஞானி' பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் ஏப்.10 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 18, 2022

Comments:0

இஸ்ரோவின் 'இளம் விஞ்ஞானி' பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் ஏப்.10

பள்ளி மாணவர்களுக்கான ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சி முகாம் மே 16 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்க | ‘டெட்’ தேர்வு அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இதற்கிடையே, கரோனா பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகயுவிகா பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டில் யுவிகா பயிற்சி முகாம் நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கடைசி நாள் ஏப்.10
அதன்படி, இஸ்ரோவின் 4 மையங்களில் மே 16 முதல் 28-ம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்.10-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்.20-ம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews