தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 31, 2022

Comments:0

தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள்

தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள்

"எங்களையே ஃபெயில் ஆக்குவியா" - ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த காலம் மலையேறி, தற்போது ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் போதாத காலம் வந்திருக்கிறது. பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம், ரவுடிகளை ஹீரோக்களாக காட்டும் திரைப்படங்களின் போக்கு, எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் ஆகியவையே இன்றைய மாணவர்களை தவறான திசைக்கு கொண்டு செல்கிறது.

அந்த வகையில், ஜார்க்கண்டில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் நம் சமூகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும், அச்சத்தையும் எழுப்புகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் டும்கா மாவட்டத்தில் பழங்குடியினர் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, கடந்த வாரம் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் செய்முறைத் தேர்வு (பிராட்டிக்கல் எக்ஸாம்) நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கின்றன. இதில் 20 மாணவர்கள் கிரேட் 'டி' மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அது ஃபெயிலுக்கு சமமான மதிப்பெண்கள் ஆகும்.

தங்களுக்கு ஃபெயில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், கணித ஆசிரியர் உள்ளிட்ட சில ஆசிரியர்களை பழிவாங்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அந்த 20 மாணவர்களும், அவர்களுடன் மேலும் சில மாணவர்களும் சேர்ந்து கொண்டு கணித ஆசிரியர்கள் இருவரை சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தேர்வு முடிவுகளை அரசு இணையதளத்தில் பதிவேற்றிய பள்ளியின் கிளார்க்கையும் மாணவர்கள் வெளியே இழுத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மூவரையும் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரத்தில் கட்டிய மாணவர்கள், அவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். பெல்ட், பிரம்பு ஆகியவற்றால் ஆசிரியர்களை மாணவர்கள் அடித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் ஆசிரியர்கள் அலறினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களை அடித்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, தாக்கப்பட்ட ஆசிரியர்களும் கூட மாணவர்கள் மீது புகார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து, மாணவர்களை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைலராக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews