ஆசிரியர்கள் பதவி உயர்வு பணிகள் மீண்டும் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 09, 2023

Comments:0

ஆசிரியர்கள் பதவி உயர்வு பணிகள் மீண்டும் துவக்கம்

Teachers-promotion-work-resume
ஆசிரியர்கள் பதவி உயர்வு பணிகள் மீண்டும் துவக்கம்

பள்ளிக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பதவி உயர்வை, மீண்டும் வழங்குவதற்கான பணிகள் துவங்கி உள்ளன.

கடந்த ஓராண்டாக, பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான பதவி உயர்வுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும், பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் பதவி உயர்வு வழங்கும் பணி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கி, பள்ளிக்கல்வித் துறை புதிய இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து, படிப்படியாக அனைத்து வகை பதவிகளுக்கும், பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Teachers-promotion-work-resumes

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84414529