தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிக்கை Girl Student Enrollment in Tamil Nadu Higher Secondary Schools Rises to 76%: Central Government Report
தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை 76 சதவீதம், மாணவர் சேர்க்கை 71 சதவீதமாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 435807
இதுகுறித்து, மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை (யுடிஐஎஸ்சி) விவரங்கள் தொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:
மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிமுக ஆட்சியை விட அதிகரித்து தமிழகம் சாதனைகள் படைத்துள்ளது.
கடந்த 2020-21 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவியர்கள் சேர்க்கை 49.8 சதவீதமாக இருந்த நிலையில், 2024-25ல் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல, 2020-21 அதிமுக ஆட்சியில் மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை 46.6 சதவீதமாக இருந்த நிலையில், 71 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் மாணவிகள் 24.7 சதவீதம், மாணவர்கள் 24 சதவீதம், மகாராஷ்டிராவில் மாணவிகள் 47.1 சதவீதம், மாணவர்கள் 46.7 சதவீதம், உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் 31.7 சதவீதம், மாணவர்கள் 31.1 சதவீதம், ராஜஸ்தானில் மாணவிகள் 33.6 சதவீதம், மாணவர்கள் 34.2 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் மாணவிகள் 24.9 சதவீதம், மாணவர்கள் 24.7 சதவீதம் என சேர்க்கை விகிதம் உள்ளது.
இதர மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதற்கு விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களே காரணம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.