60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 20, 2024

Comments:0

60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு - PDF

60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு

அரசு அறிக்கை:

தமிழக அரசுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணியானது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்றவை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்காக, ஜன., 2024 ஜனவரி வரை, 27,858 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர, பல்வேறு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.நீதித்துறையில், 5,981 பணியிடங்கள்; பள்ளிக்கல்வித் துறையில், 1,847; வருவாய்த் துறையில், 2,996; மக்கள் நல்வாழ்வுத் துறையில், 4,286; ஊரக வளர்ச்சித் துறையில், 857; உயர்கல்வித் துறையில், 1,300; காவல், நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட மற்ற துறைகளில், 15,442 பணியிடங்களும், அந்தந்த துறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டுள்ளன.

அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், 60,567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசுப் பணி அளிப்பு தமிழக அரசு தகவல்

சென்னை, பிப்.18: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியி டப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அரசுப் பணிக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வ தற்கான தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வுவாரி யம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக 2024 ஜனவரி வரை 27,858 அரசுப் பணியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப் புகள் மூலமாக 2024 ஜனவரி வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய் யப்பட்டுள்ளனர். துறைவாரியான நியமனங்களைப் பொருத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித் துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதா ரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறையில் 4286 பணியிடங்களும்,ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயி லாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடை முறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங் கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மொத்தமாக 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு பல் லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க உலக முதலீட்டாளர்க ளும் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு வழி வகை செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசு தகவல் PDF The Tamil Nadu government has informed that 60,567 people have been given government jobs in 3 years. தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 27,858 பேர்களுக்கும், பல்வேறு அரசுதுறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் நீதி துறையில் 5,981, பள்ளிக் கல்வித்துறையில் 1,847,வருவாய் துறையில் 2,996 ஊரக வளர்ச்சித் துறையில் 857,உயர்கல்வித்துறையில் 1,300, சுகாதாரத்துறையில் 4.286 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews