அண்ணாமலை பல்கலை பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழுக்கு இணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 12, 2024

Comments:0

அண்ணாமலை பல்கலை பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழுக்கு இணை

1324578


அண்ணாமலை பல்கலை பி.லிட் படிப்பு பி.ஏ. தமிழுக்கு இணை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.லிட். படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு இணையானது என உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. இதுகுறித்து உயர்கல்விதுறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.லிட். படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பி.ஏ. தமிழ் பட்டப்படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (ஆனர்ஸ்- வங்கி மற்றும் நிதி பணிகள்) படிப்பும், கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் (தொழில்சார் கணக்கு) படிப்பும் பி.காம் படிப்புக்கு இணையானதாக அனுமதிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84606960